601. குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்  

பொருள்: ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

வணக்கம். என் தமிழ் வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீங்கள் தமிழ்ப் படப் பாடல்கள் கேட்கும் பழக்கம் உள்ளவரா? அதிலும் பழைய பாடல்கள் விரும்பிக் கேட்கும் வழக்கம் உள்ளவராயிருந்தால் இந்தப் பக்கங்களை மகிழ்ச்சியுடன் புரட்டிப் பார்க்கலாம். எனக்குப் பிடித்த என்னிடம் இருக்கின்ற பழைய, புதிய பாடல்களை இந்த வலைத்தளத்தில் பரவ விட்டிருக்கின்றேன்.