Lyrics :
அன்புள்ள அப்பா! என்னப்பா? உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா? அப்பப்பா! பொல்லாத பெண்ணப்பா!! (2) ம்ம்.. உங்களோடது காதல் கல்யாணம் தானே? ofcourse... it was a love marriage! நீங்க அம்மாவ பார்த்தது எப்போது? ஞாபகம் உண்டா இப்போது? ம்ம்ம்... முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே! அவளை நான் பார்த்தது... மலர்கள் வண்டுகளுக்கு பேட்டி கொடுக்கும் ஊட்டியில்! ஒரு மலர்க்காட்சியில்தான் அந்த நந்தவனத்தைச் சந்தித்தேன்.. அம்மா எப்படி அழகா இருந்தாங்களா? அந்த மலர்க்காட்சியில் அழகான பூவே அவள் மட்டும் தானே? பூக்களெல்லாம் அவள் கனிந்த முகம் காண நாணிக் கோணி குனிந்து கொண்டன... உங்கள் மணவாழ்க்கையில் மலரும் நினைவுகள் உண்டா? நான் தாயிடம் கூட பார்த்ததில்லை அந்த பாசம் அவள் நினைவுகளே என் சுவாசம்! அன்புள்ள அப்பா! என்னப்பா? உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா? அப்பப்பப்பா! நாட்டி கேர்லப்பா!! அப்பா! அம்மா உங்கள நல்லா கவனிச்சுகிட்டாங்களா? சேலையில் எனது முகம் துடைப்பாள் நான் சிணுங்கினால் செல்ல அடி கொடுப்பாள் விரல்களுக்கெல்லாம் சுளுக்கெடுப்பாள் என் நகக்கண்ணில் கூட அழுக்கெடுப்பாள் தாயாய் அவளைப் பார்த்ததுண்டு என் தாதியாய் அவளைப் பார்த்ததுண்டு ஒரு தேன்குடமாய் அவளைப் பார்த்ததுண்டு பட்... அவள் உறங்கி மட்டும் நான் பார்த்ததில்லை! இஸிட்? அம்மா உறங்கி நீங்க பார்த்ததேயில்லையா? பார்த்தேன் மகளே.. பார்த்தேன் பார்த்தேன் மகளே.. பார்த்தேன் எப்போது அவள் கடைசி உறக்கம் கொள்ள கண்மூடினாளோ அப்போது தான் அவள் உறங்கப் பார்த்தேன். அப்பா? ஆம் மகளே! நீ கண் திறந்தாய்.. அவள் கண் மறைந்தாள் என் வானத்தில் விடிவெள்ளி எழுந்தது.. வெண்ணிலவு மறைந்தது.