ஆம். தமிழை வளர்க்க வேண்டுமானால் தமிழில் பேசினால் தான் வளரும். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றும் சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திக்குச் சேர்ப்பீர் என்றும் சொன்னதை நினைவில் கொண்டு தெரிந்த நண்பர்களிடம் தமிழில் பேசுங்கள். குறிப்பாக குழந்தைகளிடம் தமிழில் அதிகம் பேசுங்கள். என் குழந்தைகளிடம் நாங்கள் தமிழில் தான் பேசுகிறோம்.